பட்டாசு ஆலைக்குள் விதிகள் மீறி மரத்தடியில் பட்டாசுகள் தயார் செய்த ஆலை உரிமையாளர் உள்பட நான்கு பேர் கைது. ஆறு லட்ச மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள மீனப்பட்டி வடக்கூர் பகுதியை சேர்ந்த அந்தோணியம்மாள் என்பவருக்கு சொந்தமான சஞ்சய் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது இந்த பட்டாசு ஆலையை கிராம நிர்வாக அலுவலர் ரவிராஜன் மற்றும் காவல் தீயணைப்பு துறையினர் ஆகியவருடன் தனிப்படைஆய்வு செய்தன அப்போது மரத்தடியில் விதிகள் மீறியும் சட்ட விரோதமாகவும் பட்டாசுகள் தயார் செய்ததை கண்டரியப் பட்டன. மேலும் முழுமையாக தயார் செய்யப்பட்ட ஆறு லட்ச மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர் மேலும் இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் ரவிராஜன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆலை உரிமையாளர் அந்தோணியம்மாள், ஆலையின் போர்மேன் ரவிக்குமார் மற்றும் தொழிலாளி பால்ராஜ், தர்மா ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்